போர்டு கார் தொழிற்சாலையை மூடக்கூடாது! 4000 தொழிலாளர்கள் பணி பாதுகாக்கப்பட வேண்டும்!

போர்டு கார் தொழிற்சாலையை மூடக்கூடாது! 4000 தொழிலாளர்கள் பணி பாதுகாக்கப்பட வேண்டும்!

செங்கற்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கும் 'போர்டு இந்தியா' கார் தொழிற்சாலையை , போர்டு நிர்வாகம் நிரந்தரமாக மூடப்போவதாகவும் உற்பத்தியை நிறுத்த போவதாகவும் கடந்த 6 மாதத்திற்கு முன்பே அறிவித்தது. இதனால்

4000 தொழிலாளர்கள் மற்றும் இந்த நிறுவனத்தை சார்ந்து பணியாற்றும் 20,000 தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆலை மூடலை தடுத்து நிறுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தொழிலாளர்கள் மத்தியில் ஆலைமூடல் ஏற்பட்டால் குறைந்த செட்டிமென்ட்தான் கிடைக்கும் கம்பெனி இயங்கும் போதே செட்டில்மென்ட் நிர்வாகத்துடன் பேசி முடிவுக்கு கொண்டுவருவது நல்லது என்ற ஏற்பாட்டில் தான் சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்கள் எதிர்பார்த்த செட்டில்மென்ட் கிடைக்காததால் 30.05.2022 முதல் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் தொழிலாளர்கள் வேலை

வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தமிழக அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, ஆலையை தொடர்ந்து செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. குஜராத்தில் உள்ள போர்டு தொழிற்சாலையும் மூடுவதாக அறிவிப்பு செய்த சூழ்நிலையில் குஜராத் அரசு டாடா நிர்வாகத்திற்கு கைமாற்றி கொடுத்த வகையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால்,

திராவிடமாடல் ஆட்சி என்று சொல்லி கொள்ளும் திமுக ஆட்சி போர்டு தொழிலாளர் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. போர்டு நிர்வாகம் ஆலை மூடலுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசிடம் கோரவில்லை; உற்பத்தியை நிறுத்துவதாக மட்டுமே அறிவிப்பு செய்துள்ளது.

தொழிலாளர்களுக்கு குறைவான செட்டில்மென்ட் கொடுத்து ஆலையை கைமாற்றி கொடுப்பதற்கோ அல்லது நிர்வாமே தொழிற்சாலையை ஏற்று நடத்துவதற்கோ வாய்ப்புள்ளதால், தொழிலாளர்கள் வேலை

வேண்டும் என்ற முழக்கத்துடன் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றனர். அந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவருவதாக சொல்லும் தமிழக அரசு போர்டு தொழிற்சாலை மூடுவதால் ஏற்படும் மூலதன இழப்பு மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையிழப்பை தடுத்து நிறுத்த, போர்டு கார் தொழிற்சாலையை மூடப்படாமல் தொழிலாளர்கள் பணி பாதுகாக்கப்பட தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லை எனில், போர்டு நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்!

சொ.இரணியப்பன்

மாநில சிறப்பு தலைவர்,

AICCTU

19 June, 2022