சேலம் தூய்மைப் பணியாளர்கள் கூட்டம்

சேலம் தூய்மைப் பணியாளர்கள் கூட்டம்

சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் குப்பனூரில் 28.08.22 ஞாயிறு அன்று நடைப்பெற்றது. இக்க மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். ஏஐகேஎம் மாவட்டச் செயலாளர் தோழர் அய்யந்துரை ஏஐசிசிடியு துணைத் தலைவர் தோழர் அ.வேல் முருகன் மற்றும் தோழர்கள் சுரேஷ், பி .ராவணன், சண்முகசுந்தரம், அறிவழகன் ஆகியோர் உரையாற்றி னார்கள். குப்பனூர், தைலனூர், கூட்டாத்துப்பட்டி, அயோத்தியாபட்டணம், ஆச்சகுட்டப்பட்டி ஊராட்சி களில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மைப் பணி காவலர்களை ஊராட்சி பணியாளராக அறிவிக்க வேண்டும். மாநில அரசு குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18000 ஆக அறிவிக்க வேண்டும். நாள்தோறும் முகக் கவசம், கையுறை வழங்க வேண்டும். ஆண்டுக்கு நான்கு சீருடைகள் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியறுத்தப்பட்டன.

13 October, 2022